அரியலூரில் தண்ணீர் குடிக்க தேடிவந்த புள்ளிமான் நாய்களிடம் இருந்து மீட்ட பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
அரியலூர் அருகே உள்ள பாலம்பாடி கிராமத்தின் ஒடையில் மான் குட்டி ஒன்று தண்ணீர் தேடி குடிப்பதற்காக வந்துள்ளது.
இந்நிலையில் கிராமத்தில் மான்குட்டியை பார்த்த நாய்கள் மான் குட்டியை துரத்தி சென்றுள்ளது. அப்பொழுது அவ்வழியாக வந்த பொதுமக்கள் நாய்களிடமிருந்து மான்குட்டியை பத்திரமாக மீட்டு தண்ணீர் கொடுத்தனர். பிறகு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் மான் குட்டிக்கு ஏற்பட லேசான காயத்திற்கு முதலுதவி அளித்து மீண்டும் வனத்துறைக்கு சொந்தமான காட்டில் விட்டனர்.
மேலும் கிராம பொதுமக்கள் கூறும்போது இப்பகுதியில் மான்கள் மற்றும் மயில்கள் உள்ளிட பல்வேறு வன விலங்குகளுக்கு தண்ணீர் அருந்துவதற்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.