அரியலூர் பேருந்து நிலையம் மற்றும் அஸ்தினாபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இணையவழி குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மற்றும் உமன் ஹெல்ப் டெஸ்க் 181 குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டபெண்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல்துறையினர் இணையத்தை பாதுகாப்பாக எவ்வாறு பயன்படுத்துவது ,அதாவது தற்போது பெரும்பாலும் மொபைல் மூலமாகவே பணம் அனுப்புவது பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து வருகிறோம் அதனால் அதன் மூலம் நடக்கும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் போது கவனமுடன் பயன்படுத்த வேண்டும் யாரிடமும் காடை கொடுக்கக்கூடாது தொலைபேசி மூலம் யார் கேட்டாலும் தகவலை அளிக்க கூடாது என வலியுறுத்தினார்.
பெண் குழந்தைகளை அடுத்தவர் உறவினர்வீட்டில்விட்டு விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும் அவர்களிடம் யாராவது தவறாக நடக்க முற்பட்டால் அல்லது ஏதாவது பிரச்சினை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிய வேண்டும்.
நமது தகவலை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, உமன் ஹெல்ப் டெஸ்க் 181 குறித்து பொது மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. பொதுமக்களிடம் பிரசுரங்களும் வழங்கப்பட்டது