செய்திகள்

சங்கரன்கோவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு..

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் நகராட்சி ஆணையர்களை அகற்ற வேண்டும்
தவறும்பட்சத்தில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க நேரிடும்.

– நீதிபதிகள் கருத்து.

சங்கரன்கோவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு..

தென்காசியை சேர்ந்த வீரபுத்துரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு

சங்கரன்கோவில் ரயில்வே பீடீர் சாலையில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்தி
பேட்டி கடைகள் அமைத்து, சாலையை ஆக்கிரமித்துள்ளனர். மேலும் சாலையில் கோழி,மாடு வளர்ப்பதால், அப்பகுதியில் கழிவு நீர் மூலமாக கொசுகள் அதிகளவில் உள்ளன இதனால் டெங்கு போன்ற காய்ச்சல் பரவி பாதிக்கப்படுகின்றனர். இந்த சாலை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

நகராட்சிக்கு உட்பட்ட இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததுள்ளனர்.இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், அனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தத விசாரணை செய்த நீதிபதிகள் ரயில்வே பீடர் சாலையில் மட்டுமல்லாமல் நகராட்சி முழுதும் உள்ள இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் ஆக்கிரமிப்பு செய்யுதுள்ள சாலை ஓர அணைத்து கடைகளை நகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் மேலும் இதுபோன்று சாலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நகராட்சி, ஆணையர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்க்காமல் தாங்களாகவே அகற்றவேண்டும் இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்..

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button