இன்று மதியம் புளியங்குடி சுப்பிரமணியபுரம் தங்கப்பழம் பள்ளி அருகே ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. சிவலிங்கேசன் என்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு தலையிலும் அவனது தந்தை மாடசாமி என்பவர்க்கு உடலிலும் காயம் ஏற்பட்டது.
அப்போது சிவகிரி சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த டாக்டர் சதன் திருமலைக்குமார் அவர்கள் சம்பவத்தை பார்த்து பதறிப்போய் தனது காரை நிறுத்தி இறங்கினார்.
அவரே மருத்துவர என்பதால் உடனடியாக. தன் வாகனத்திலிருந்த உபகரணங்களைக் கொண்டு முதலுதவி செய்தார்.
காயம்பட்டவர்களை சற்றும் தாமதிக்காமல் தன் சொந்த காரிலேயே புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு உடனிருந்து முழுமையான முதலுதவிகள் செய்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மாவட்டம் பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தார்.
சாதாரணமான பொதுமக்களே ஒரு விபத்து நடந்த இடத்திற்கு சென்றால் நாளை கோர்ட்டு ,கேசுன்னு அழைய வேண்டுமென நினைத்து ஒதுங்கி போகும் வேளையில் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் காயமடைந்தவர்களை காப்பாற்றி, அதுவும் தன் காரிலேயே அழைத்து சென்றதை கண்டு பொதுமக்கள் நெகிழ்ந்து போனார்கள்
அவருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
எம்.எல்.ஏ சதன் அவர்களுக்கு வாழ்த்துக்ள் குவிந்து வருகிறது.