தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைத்தை புலவனூர் மக்கள் முற்றுகையிட்டு அமர்ந்து போராட்டம்.
கடந்த மாதம் இரு தரப்பினரிடையே மோதல் இருந்த நிலையில், தற்பொழுது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை வருவாய் துறையினர் மூலம் அகற்றப்பட்ட நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்த இருவரை மட்டும் காவல்துறையினர் அழைத்து வந்த நிலையில் அவர்களை விடுவிக்க மறுத்த காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் மற்றும் அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கடையம் காவல் நிலையம் வாசல் முன் அமர்ந்து தற்பொழுது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தற்பொழுது சாரல் மழையில் நனைந்தப்படி பெண்கள் மற்றும் ஆண்கள் காவல்நிலைய வாசலில் அமர்ந்து முற்றுகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள் : ஆர்.எஸ்.சரண், கடையம்