சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத் (9941350369) பேக் தயாரிக்க முலப் பொருட்களை வாங்க ரூபாய் 10,00,000 ( ரூபாய் பத்து இலட்சத்துடன் ) மதுரை வந்தவர் மதுரையை சேர்ந்த பாண்டி என்பவரிடம் ரூபாய் 5,00,000 கடன் பெற கடந்த 05/07/2021 அன்று நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள சாந்தி லார்ஜ் அருகே வர சொல்லி பணம் வந்து விடும் காத்திருங்கள் என்று சொன்ன பாண்டி சிறிது நேரத்தில் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி உடன் சில அடி ஆட்களுடன் வந்து அர்சத் கையில் வைத்திருந்த ரூபாய் 10,00,000 இலட்சத்தை பறிக் கொண்டு பணத்தை திருப்பி கேட்டா உன் பெயரில் கஞ்சா வழக்கு போடுவேன் என மிரட்டி விரட்டி விட்டார்.
பலரிடம் கடன் பெற்ற அர்சத் செய்வது அறியாது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகிய போது மதிப்புமிகு காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் மற்றும் மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நேர்மிகு S.சந்திரமௌலியும் நடத்திய விசாரணையில் அப்பாவி வியாபாரி பணத்தை காவல் ஆய்வாளரிடம் பணத்தை இழந்த உண்மை வெளியானது.
இதனை தொடர்ந்து இன்று (27/07/2021) பணம் பறித்த காவல் ஆய்வாளர் வசந்தியின் திருமதி வசந்தி வியாபார நிமித்தமாக கொண்டு சென்ற ரூபாய் 10,00,000 ( ரூபாய் பத்து இலட்சத்தை ) பிடுங்கியதாக இ.த.ச 384, 409, 420, 506(1) ஆகிய நான்கு பிரிவுகளில் மாவட்ட குற்ற பிரிவு போலிசார் வழக்கு பதிவு ( வழக்கு எண் 18/2021) செய்தனர்.
ஒரு இந்திய குடிமகன் நம்பிக்கையோடு போராடி முதல் தகவல் அறிக்கையை பதிய வைத்ததும், தான் உழைத்து முன்னேற நம்பிக்கையோடு சேர்த்த பணத்தை திரும்ப பெற போராடும் குணத்தையும் பெற்ற இளையான்குடி அர்சத் கொரோனா என்னும் கொடிய அரக்கனை வென்று தொழில் துவங்க முயற்சித்த போது காவல் துறையில் ஆய்வாளரால் அநியாயம் இழைக்கப்பட்டு அதே காவல் துறையின் நேர்மை அதிகாரிகளால் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு அவர் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் ரூபாய் 10,00,000 கிடைக்கட்டும்.
காவல் ஆய்வாளர் வசந்தி மீது போடப்பட்ட FIR உள்ள பிரிவுகளும் விளக்கமும்
இந்திய தண்டனை சட்டம் 384 பயமுறுத்தி பணம் பறித்தல் தண்டனை 3 ஆண்டுகள் கடுங்காவல்.
இந்திய தண்டனை சட்டம் 409 ஒரு பொதுஊழியரிடம் அல்லது ஒரு வங்கி நிர்வாகி (பாங்கர்) யிடம் அல்லது வியாபாரி, தரகர் ஏஜென்ட் அல்லது அத்தகைய பனி புரிபவர் ஆகியவர்களிடம் ஒரு சொத்து ஒப்படைக்கப்படுகிறது. அல்லது ஒரு சொத்தின் ஆதிக்கம் அவர்களிடம் வரும்படி செய்யப்படுகிறது. அந்த நிலையில் அந்தச் சொத்தை அவர்கள் நம்பிக்கை மோசம் செய்தல் அந்தக் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் 420 ஒருவரை ஏமாற்றி அதன்மூலம் நேர்மையின்றி அவரைத் தூண்டி, ஒரு சொத்தைப் பிறருக்கு கொடுக்கும்படி செய்தாலும் அல்லது ஒரு மதிப்புள்ள காப்பீட்டை உருவாக்கும்படி அல்லது மாற்றும்படி அல்லது அளிக்கும்படி செய்தாலும் அல்லது மதிப்புள்ள காப்பீடாகக் கையெழுத்திடப்பட்டு முத்திரை இட்டுப் பயன்படுத்துவதற்கும் பொருளை அவ்வாறு உருவாக்க மாற்ற அல்லது அளிக்கத்தக்க செயல் புரியும்படி செய்தாலும் அத்தகைய வஞ்சனை புரிந்தவருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் 506(1) குற்றம் கருதி மிரட்டல்- என்ற குற்றத்தைப் புரிவருக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அத்தகைய மிரட்டல், உயிர் போக்கும் குற்றம் புரியப்படும் அல்லது கொடுங்காயம் உண்டாக்கப்படும் அல்லது தீயிட்டுச் சொத்து அழிக்கப்படும் அல்லது மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை பெறத்தக்க குற்றம் புரியப்படும் என்று மிரட்டுவதற்காக இருப்பின், அந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.