செய்திகள்

குளத்தூரில் ரூபாய் 7,60,000/- மதிப்புள்ள கஞ்சா மற்றும் ஒரு கார் பறிமுதல்.

தூத்துக்குடிமாவட்டம்
குளத்தூர் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கடலோரபாதுகாப்பு குழும போலீசாருக்கும், மாவட்ட காவல்துறைக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் குளத்தூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திரு. முருகன் தலைமையில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வன், முதல்நிலைக் காவலர் திரு. இராசையா, தனிப்பிரிவு காவலர் திரு. ராஜசேகரன் மற்றும் கடற்கரை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ திரு. விஜயகுமார், திரு. பரமசிவன் ஆகியோர் நேற்று (28.07.2021) குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவைப்பாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த காரை சோதனை செய்ததில் அதில் 4 மூட்டைகளில் ரூபாய் 7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் அந்த காரில் இருந்த ரூபாய் 7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா மற்றும் அந்த காரையும் கைப்பற்றினர். இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு. முருகன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் சம்மந்தப்பட்டதாக 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 227 பேர் கைது செய்யப்பட்டு 348 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் போதைப் பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் உட்பட 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 932 பேர் கைது செய்யப்பட்டு 75,000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button