நாளையுடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது
தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை இன்றே நிறுத்துவதாக ஆலை நிா்வாகம் அறிவித்துள்ளது