செய்திகள்

ஓட்டப்பிடாரமில் வழிமறித்து அரிவாளால் கொலை செய்ய முயன்ற பிரபல ரவுடிகள் கைது.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பகுதியை சேர்ந்த ராமசந்திர பாண்டியன் மகன் மந்திரமூர்த்தி (45) என்பவர் நேற்று (01.08.2021) ஓட்டப்பிடாரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் இவரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து மந்திரமூர்த்தி அளித்த புகாரின்பேரில் ஓட்டப்பிரடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எதிரிகளை விரைந்து கைது செய்ய மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சங்கர் அவர்களுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவுப்படி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை மூலமாக பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், கயத்தார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எதிரிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அரிக்கண்ணன், முதல்நிலை காவலர் திரு. மோகன்ராஜ், காவலர் திரு. பாலமுருகன் அடங்கிய போலீசார் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன், உதவி ஆய்வாளர் திரு. எபனேசர் மற்றும் காவலர் திரு. கணேசன் ஆகியோர் சேர்ந்து பன்னீர்குளம் ரோடு பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டபோது அங்கு 3 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முறப்பநாடு பக்கப்பட்டி பகுதியை சேர்ந்த 1) பிரமுத்து மகன் வடிவேல் முருகன் (21), பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 2) பாலகிருஷ்ணன் மகன் வேல்முருகன் (28), பாளையங்கோட்டை குன்னத்தூர் பகுதியை சேர்ந்த 3) சப்பாணிமுத்து மகன் பிறமுத்து மணிகண்டன் (எ) காளை (20), திருநெல்வேலி மேலநத்தம் பகுதியை சேர்ந்த 4) சிவசாமி மகன் மகாராஜன் (எ) ராஜா (21) மற்றும் திருநெல்வேலி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 5) சங்கரபாண்டியன் மகன் ஆனந்த கண்ணன் (எ) ஆனந்த் (24) என்பதும், இவர்கள் மேற்படி மந்திரமூர்த்தியை அரிவாளால் தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து ஓட்டப்பிடபாரம் காவல் நிலைய போலீசார் மேற்படி பிரபல ரவுடிகள் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 அரிவாள்களையும், அவர்கள் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி வடிவேல் முருகன் மீது முறப்பநாடு, பாளையங்கோட்டை காவல் நிலையங்களில் ஒரு கொலை, கொலை முயற்சி உட்பட வழக்கும் 3 வழக்குகளிலும், எதிரி வேல்முருகன் மீது திருநெல்வேலி ஜங்சன் மற்றும் திருநெல்வேலி மானூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கு என 2 வழக்குகளிலும், அதே போன்று எதிரி பிறமுத்து மணிகண்டன் (எ) காளை மீது திருநெல்வேலி மாநகரம் ஜங்சன் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் 2 வழக்குகளிலும் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி பிரபல ரவுடிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button