மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை, அருணாசலபுரம், மணி நகரம், கோட்டைவிளைப்பட்டி, முதலியார்பட்டி ஆகிய ஊர்களுக்கு இரவு நேரங்களில் கரடிகள் சுற்றி திரிகின்றன, இவைகளை கண்டு வீட்டில் வளர்க்கும் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டு பொது மக்கள் வெளியில் வந்து பார்த்தால் கரடிகள் நடமாடுவது தெரியவந்துள்ளது. பலமுறை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு பட்டாசு வெடித்து கரடியை வனப்பகுதியில் விரட்டுவதாக கூறுகிறார்கள்.
ஆனால் கரடிகள் இரவு முழுவதும் ஊருக்குள் சுற்றித் திரிந்துவிட்டு அதிகாலையில் வனப்பகுதிகள் சென்றுவிடுகிறது.
நேற்று இரவு 8 மணிஅளவில் கோட்டைவிளைப்பட்டியில் உள்ள
ராமர் கோயில் அருகேயுள்ள ஒரு வீட்டில் கரடி ஒன்று, வீட்டின் உரிமையாளர் மாட்டிற்கு வைத்திருந்த கழுநீரை குடித்து சென்றுள்ளது,
இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் செல்போனில் படம் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்களை கண்டதும் கரடி அங்கிருந்து சென்றுள்ளது.
அவர்கள் கூறுகையில் மொத்தம் 4 கரடிகள் ஊருக்குள் சுற்றி திரிகின்றன. இதுவரை பொதுமக்கள் யாரையும் தாக்கவில்லை, நாங்கள் வீட்டில் மாட்டிற்கு வைக்கும் கழுநீரை தினமும் வளர்ப்பு பிராணிகள் போல இந்த காரடிகளில் ஒரு கரடி வந்து குடித்து செல்கிறது. இருப்பினும் கரடிகளால் பொதுமக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் முன்னர் வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்தால் நல்லது எனவும் தெரிவித்தனர்.