தூத்துக்குடி மாவட்ட காவல்தறை சார்பில் 3வது மைல் அருகே உள்ள எப்சிஐ ரவுண்டானா அருகில் கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4வது நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொரோனா 3வது அலை பரவலை தடுக்க முன்னேற்பாடாக எடுக்க வேண்டிய பாதுகாப்ப நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள. இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், லாரி ஓட்டுனாகள் மற்றும் அருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முககவசம், சானிடைசர், கபசரக்குடிநீர் உள்ளிட்டவற்றை எஸ்பி ஜெயக்குமார் வழக்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் வெடிகுண்டை வைத்து மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகர பட்டினத்திலும், தூத்துக்குடி நகர் பகுதியிலும் இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டுகள் இவர்கள் கையினால் செய்யப்படக்கூடிய வெடிகுண்டு. தனிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த வெடிகுண்டுகள் பிடிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தலைமையில் வெடிகுண்டு தடுக்க இரண்டு தனிப் பிரிவுகள் இயங்கி வருகிறது. அவர்கள் ரவுடிகளை கண்காணிப்பது சமூக விரோத செயல்களான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பவா்களை கண்காணித்து வருகின்றனர். கண்டிப்பாக இந்த (வெடிகுண்டு) கலாச்சாரத்தை தூத்துக்குடியில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில், சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் படலம் துவக்கியுள்ளது. வெகுவிரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றார். நேற்று நடைபெற்ற ஏரல் கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 439வது ஆண்டு பெருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. பக்தர்கள் பங்கேற்பு இன்றி அரசு விதிமுறைகளை கடைபிடித்து பூஜைகள் நடைபெறும் என்றார்.