தூத்துக்குடி அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க 30 பேர் கொண்ட கும்பல் குடும்பத்தினரை வீட்டில் அடைத்து வைத்து கொலை முயற்சி: சிசிடிவி காட்சிகள் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் பரபரப்பு
தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ஆத்முத்து மனோகரன் இவருக்கு சொந்தமாக தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிசாலையில் கோரம்பள்ளம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது இந்த நிலத்தை ஆதிமுத்து மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனுபவித்து வருகின்றனர் இந்நிலையில் இந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தங்களுக்கு சொந்தம் எனக்கூறி டேனியல், ரஞ்சித், ஐய்யா துரை உள்ளிட்ட சுமார் 32 பேர் உரிமை கொண்டாடி வருகின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் வழக்கு விசாரணை வரும் 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆதிமுத்து மனோகரனிடம் சிலர் இந்த இடத்தை தங்களுக்கு கொடுக்குமாறு கூறிவந்துள்ளனர் இந்நிலையில் இன்று காலை ஆதிமுத்து மனோகரன் குடும்பத்தினர் வீட்டில் இருக்கும் போது ஒரு 30 பேர் கொண்ட கும்பல் ஜேசிபி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அவரது குடும்பத்தினரை தாக்கி ஒரு அறையில் பூட்டி வைத்து இந்த இடத்தை விட்டு காலி செய்யாவிட்டால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று கூறியதுடன் வீட்டைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை இடித்து தரைமட்டமாக்கி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஆத்திமுத்து மனோகரன் மகன் தலையில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆதிமுத்து மனோகரன் குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியிருக்கும் நிலத்தை அபகரிக்க 30 பேர் கொண்ட கும்பல் ஒரு குடும்பத்தை பயங்கரமாக தாக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.