செய்திகள்

விஷவாயு தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு வீடு தேடி சென்று இழப்பீட்டுத் தொகை வழங்கிய நீதிபதி.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி சேர்ந்தவர்கள் ராஜு, மாயாவு. இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பாதாள சாக்கடை சுத்தம் பண்ணும் பணியின்போது விஷவாயு தாக்கி இறந்தனர். இவர்களது உடல்கள் 7 வருடத்திற்கு முன்பு சொந்த ஊரான வீரசின்னம்பட்டி யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது குடும்பத்தினர் யாரும் இழப்பீட்டுத் தொகை ஏதும் கேட்காத நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த வக்கீல்கள் பைசல் அட்டிபட்டி மற்றும் பிரதீப் இவர்கள் இருவரும் தாமாகவே முன்வந்து இழப்பீட்டுத் தொகை கேட்டு வழக்கு தொடுத்தனர். 20.07. 2021 அன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும்
சாலி ஆகிய இரு அமர்வு நீதிபதி முன்னிலையில் இறந்த இருவருக்கும் தலா 10 லட்சம் கேரளா குடிநீர் வாரியம் வழங்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி இன்று ஆர். பாரதிராஜா நீதிபதி ( செயலாளர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு) அவர்கள் ராஜு, மாயாவும் ஆகிய இரு குடும்பத்தாருக்கும் தலா 10 லட்சம் வீதம் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வீடு தேடிச் சென்று பகிர்ந்தளித்து காசோலை வழங்கினார்.
தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் கவிச் சித்ரா, வி.ஏ.ஓ, சொர்ணலதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button