அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் (வயது 80) உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதுசூதனன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர் மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத்தலைவராக மதுசூதனன் இருந்து வந்தார். 2017-ம் ஆண்டு அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மதுசூதனன் செயல்பட்டார்.