மதுரை மத்திய சிறைச்சாலை 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள நிலையில், மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சக்கரவர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை மத்திய சிறைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அதன்பிறகு போலீசார் சிறைச்சாலையின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர். இதேபோல கைதிகள் தங்கியுள்ள அறைகளில் கழிவறை உள்ளிட்ட பகுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மதுரை மத்திய சிறையில் உணவு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை 2 மணிநேரம் நீடித்தது. அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், பயங்கர ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மதுரை மத்திய சிறையில் சுமார் 2 மணி நேர சோதனைக்குப் பிறகு போலீசார் அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இது வழக்கமாக நடைபெறும் சோதனைகளில் ஒன்று. இதில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெட்ரூம் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.