ஆட்சி மாறினாலும் மாறாத காட்சிகள் தமிழக எல்லைப்பகுதி தென்காசி மாவட்டம் புளியரை செக் போஸ் ட் வழியாக கேரளாவிற்கு தங்கு தடையின்றி கடத்தப்படும் கல் Msand ஜல்லி போன்ற கனிம வளங்கள் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு என்ற பெயரில் கொள்ளை லாபத்துக்கு கேரளாவிற்கு விற்கபடும் அவல நிலை கடந்த அதிமுக ஆட்சியில் தங்கு தடையின்றி துணைமுதல்வரின் பெயரால் கடத்தப்பட்டு வந்தது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகும் நெல்லை மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்துறை நல்லாசியோடு கனிம வளக்கடத்தல் குறைவின்றி நடைபெற்று வருகிறது.உறக்கத்திலிருக்கும் மாவட்ட காவல்துறை துறை கண்காணிப்பாளருக்கு தகவல் சொல்லும் தனிப்பிரிவும் மாநில உளவுப்பிரிவும் விழித்து கொண்டு தமிழக கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் கும்பலின் மாய வலையிலிருந்து விடுபட்டு மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாநில உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் சொல்வார்களா?
ஜாதியால் தள்ளாடும் தனிப்பிரிவு உறங்கும் உளவுப்பிரிவு
பின்குறிப்பு திருநெல்வேலி தென்காசி மற்றும் பகுதிகளில் காவல்துறைக்குள் குறிப்பாக உளவுப்பிரிவுக்குள் ஜாதிய ரீதியாக செயல்படும் தனிப்பிரிவு மற்றும் மாநில உளவுப்பிரிவு காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை உள்ளவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் தான் காவல்துறையின் மாண்பு காக்கப் படும் என்பது நேர்மையான காக்கிகளின் கோரிக்கையாக உள்ளது.