நடிகை மீரா மிதுன் சமீபத்தில் பட்டியலின சினிமா இயக்குனர்கள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் பட்டியலின சினிமா இயக்குநர்கள் குறித்தும், அவர்களின் சாதி குறித்தும் மிக அவதூறாக பேசியதாக கூறியும்,
நடிகை மீரா மிதுனின் வீடியோ சமூக பதட்டத்தை உண்டாக்கும் விதமாக உள்ளதால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் மணி அமுதன் என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் இன்று புகார் மனு அளித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மணி அமுதன் :
நடிகை மீரா மீதுனின் வீடியோவால் கோடிக்கணக்கான பட்டியலின மக்கள் வேதனை அடைந்துள்ளனர், நடிகை மீரா மிதுனின் வீடியோ சமூக பதட்டத்தை உண்டாக்கும் விதமாக உள்ளது ஆகவே நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது காதலர் அபிஷேக் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கூறினார்.