தூத்துக்குடி சண்முக புரத்தை சேர்ந்தவர் நடராஜன் இவர் 45 வது வட்ட திமுக செயலாளராக உள்ளார். நடராஜன் ராமசாமிபுரத்தில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில்
இரவு சுமார் 2 மணி அளவில் ராமசாமி பரத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நண்பர் அருணுடன் வந்த நடராஜனிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளனர் அப்போது நடராஜன் மீது செங்கலை வீசியும் கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர்
தகவலறிந்த தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குற்றவாளியை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், டிஎஸ்பி கணேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
தீவிரமாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் மறைந்திருந்த
தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்த தங்ககார்த்திக் (25), தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த அருண்குமார் (22), சிவந்தாகுளம் ரோடு பகுதியை சேர்ந்த அந்தோணி முத்து (21) மற்றும் தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (21) ஆகிய 4 பேர் சேர்ந்து நடராஜனை கத்தியால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் மேற்படி 4 பேரையும் கொலை நடந்த 4 மணி நேரத்தில் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சண்முக புரத்தில் உள்ள முனியசாமி கோவிலில் கொடை விழாவில் நள்ளிரவில் மது அருந்திவிட்டு ஆட்டம் போட்டதாகவும் கோயில் நிர்வாகிகளுடன் சேர்ந்து நடராஜன் தன்னை வெளியே போகச் சொல்லி மிரட்டியதால் ஆத்திரமடைந்து நடராஜன் அலுவலகம் சென்றபோது பின்தொடர்ந்து அங்கு வைத்து அப்போது ஆட்கள் இருக்கும் போது சத்தம் போட்டாய் இப்போது நீ என்ன செய்வாய் என அவரிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை 4 மணி நேரத்தில் கைது செய்த டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீசார் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்