தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தாந்தோணி கிளை சார்பில் கரூர் காந்திகிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
தாந்தோணி வட்டார கிளை வட்டார மாநாடு வட்டார தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் ஆசிரியை திலகவதி வரவேற்புரையாற்றினார்.
புதிய உறுப்பினர்களை மாவட்ட செயலாளர் ஜான் பாஷா அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியில் மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தின் துணை முதல்வர் முருக பாண்டியன் அறிவியல் தேசம், 101கேள்விகள் 100 பதில்கள், பொம்மைகளின் நகரம் உள்ளிட்ட மூன்று புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் தீபம் சங்கர் மேற்பார்வையில் புத்தக வாசிப்பு நிகழ்வில் ஓவிய ஆசிரியர் ரவிக்குமார் கலந்து கொண்டு தலைமை தாங்கி நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் காமராஜ், பட்டதாரி ஆசிரியர் பிரபாகரன், மத்திய அரசின் சிறந்த அறிவியல் தொழில்நுட்ப விருதுபெற்ற ஆசிரியர் மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு புத்தக வாசிப்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் காந்திகிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம், எழுதியாம்பட்டி தலைமையாசிரியர் கலா,கோர்ட் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.