மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூர் என்ற இடத்தில், இரண்டு கார்கள்நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமங்கலம் அருகே , மதுரை – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி. குன்னத்தூர் என்ற இடத்தில் , ராஜபாளையத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த காரும், மதுரையிலிருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற காரும், நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ராஜபாளையத்தில் மதுரை நோக்கி வந்த காரின் முன் பக்கம்முழுவதும் நசுங்கி நிலையில், விபத்து ஏற்பட்டதில் , அக் காரில் வந்த மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த ரசஃபுதின் (48) என்ற வழக்கறிஞர் , முகம்மது மைதீன் (46), வஹாப்பு (58) 3 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாயினர் .இதில் முகமது ரசஃபுதீன் (48)காரை ஓட்டி வந்துள்ளார். இவர்கள் மூவரும் ராஜபாளையத்தில், ரியல் எஸ்டேட் தொழில் விஷயமாக சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்து , மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் மதுரை – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.