பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9-வது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் வரையில் 68.76 கோடி பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9-வது தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கிறார். இதன்படி 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார்