அரசு இந்திய கடல்சார் மீன் நில மசோதா என்ற பாரம்பரிய மீனவர்களுக்கு எதிராக கொண்டுவரவுள்ள மசோதாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் கடலில் கருப்பு கொடியுடன் இறங்கி மீனவர்கள் போராட்டம்
மத்திய அரசு இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021 நிறைவேற்ற உள்ளது இந்த மீன்பிடி சட்ட மசோதாவால் பாரம்பரிய மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மேலும் கடல் பரப்பை மூன்றாகப் பிரித்து மீன்பிடித் தொழில் செய்ய இந்த சட்டம் வழிவகுப்பதுடன் மீன்பிடி தடை காலம் மீனவர்களின் மீன்பிடி நேரம் போன்றவைகளை மாநில அரசிடம் இருந்து பறித்து மத்திய அரசை நிர்ணயிக்கும் வகையில் இந்த சட்ட திருத்த மசோதா உள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (9ம் தே தி ) தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரை உள்ள கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் விவேகானந்தா காலனி கடற்கரையில் கடலில் மீனவர்கள் கையில் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி மத்திய அரசு மீனவர்களுக்கு எதிரான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.