செய்திகள்டிரெண்டிங்
Trending

எஸ்.பி.வேலுமணி மீது ரூ.1.2 கோடி மோசடி செய்ததாக காண்ட்ராக்டர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

கோவை, வடக்கு கணபதிபுரம் வி.ஜி. ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம் ( 51) இவர் காண்ட்ராக்டராக உள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இன்று நேரில் வந்த திருவேங்கடம் காவல் ஆணையரைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும் அவரது உதவியாளர் மீதும் புகார் அளித்தார்.
புகார் மனுவில் :
நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு 2002 முதல் திரு.S.P. வேலுமணி அவர்கள் பழக்கமானவர். 2016 ஆண்டு ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சர் திரு.S.P வேலுமணி அவர்கள் என்னிடம் முன் தொகையாக கமிஷன் கொடுத்தால் சிவில் ஒர்க்ஸ் ஒப்பந்த பணிகள் தருவதாக சொன்னார்.
எனக்கு சிவில் ஒப்பந்த பணிகளை முன்னாள் அமைச்சர் திரு.S .P வேலுமணி தருவதாக சொன்னதன் பேரில் , கடந்த 04.03.2016 ஆம் தேதியில் சென்னை , கீரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் திரு.S .P . வேலுமணி அவர்களின் இல்லமான ரோஜா இல்லத்திற்கு நேரில் சென்று ரூபாய் 1,00,00,000 (ரூபாய் ஒரு கோடி மட்டும் ) மற்றும் 15.07.2016 ஆம் தேதியில் ரூ.20,00,000 /- (ரூபாய் இருப்பது இலட்சம் மட்டும் ) ஆக மொத்தம் ரூ.1,20,00,000/- (ரூபாய் ஒரு கோடியே இருபது இலட்சம் மட்டும் ) சென்னை கீரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் இல்லமான ரோஜா இல்லத்தில் வைத்து கொடுத்தேன்.. மேலும், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.S .P . வெளுமை அவர்கள் சொன்னபடி அவருடைய P.A (Personal Asstant ) பார்த்திபன் அவர்களிடம் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும் ) கொடுத்தேன் .
மேற்கண்டவாறு ரூபாய் ஐந்து இலட்சம் பணம் கொடுத்த விபரத்தை முன்னாள் அமைச்சர் திரு.S.P. வேலுமணியிடம் சொல்லிவிட்டேன்.ஆனால் , அமைச்சர் அவர்கள் சொன்னபடி எனக்கு சிவில் ஒர்க்ஸ் காண்ட்டிராக்ட் ஒப்பந்த பணிகள் கொடுக்கவில்லை. மேற்கண்ட ஒப்பந்த பணிகளை வேறு ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுத்துவிட்டார்கள்.
அவர்கள் எனக்கு கொடுப்பதாக சொன்ன ஒப்பந்த பணிகளை கொடுக்கவில்லை.மேற்படி நான் கொடுத்த பணத்தையும் எனக்கு கொடுக்கவில்லை. நான் அதன்பின்பு பலமுறை நேரில் சென்று நான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டேன், அப்பொழுதெல்லாம் பொறுமையாக இருங்கள் பணி ஒதுக்குகின்றேன் என சொல்லி காலம் தாழ்த்தி வந்தனர்.
முன்னாள் அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களின் மூத்த சகோதரர் அன்பு என்கின்ற அன்பரசன் அவர்களை 19.06.2021 அன்று நேரில் சந்தித்து விவரங்களை சொன்னேன். அதற்கு 3 நாட்கள் கழித்து தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு கூறினார். நான் 20.06.2021 தேதி அன்று திரு.S.P. வேலுமணி அவர்கள்;இந்த கோயம்புத்தூரில் உள்ள அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்து, ஆட்சி மாறிவிட்டது இனி எப்படி எனக்கு பணி ஒதுக்குவீர்கள். எனவே எனது பணத்தை திரும்ப தாருங்கள் என கேட்டேன், 20 நாட்களில் தருவதாக கூறினார். மேலும் அவர்களின் மூத்த சகோதரர் அன்பு அவர்களை 23.06.2021 அன்று நான் நேரில் அவர்களின் வீட்டிற்கு சென்றபோது அவர் சென்னை சென்றுள்ளதாக கூறினார்கள்.
நான் அவர்களை குறுந்தகவல் மூலமாக 23.06.2021 நான் தொடர்பு கொண்டு என்னுடைய பண பிரச்னையை கூறினேன். அவர்கள் S.P. வேலுமணியின் அறிவுறுத்தலின் பேரில் என்னுடைய என்னுடைய அவசர தேவை எவ்வளவு என்று கேட்டார். நான் 5 லட்சம் அடகு கடைக்கு வட்டி கட்ட தேவைப்படுவதாக கூறினேன், உடனே என் வாங்கி கணக்கை அவர் அனுப்புமாறு கேட்டார். நானும் அவரது கைப்பேசிக்கு வங்கி கணக்கு எண்ணை அனுப்பினேன். அன்றைய தினமான 23.06.2021 அன்று ரூபாய் 5 லட்சம் நான் குறிப்பிட்ட சிட்டியூனியன் வாங்கி கணக்கிற்கு வந்துவிட்டது . மீதி பணம் இரண்டு தவணையாக சில நாட்களில் திருப்பி தருவதாக சொன்னார்.
பின் 11.07.2021 அன்று S.P. வேலுமணி அவரின் கோயம்புத்தூரில் உள்ள வீட்டிற்கு பார்க்க சென்றேன். அமைச்சர் உதவியாளர்கள் சந்தோஷ், தேவராஜ் அவர்கள் உங்களை SP வேலுமணி KCP சந்திரசேகர் அவர்களது வடவள்ளி அலுவலகத்திற்கு சென்று சந்திரசேகர் மற்றும் வினோத் அவர்களை பார்க்க சொன்னார்கள் எனக் கூறினார்கள். நானும் அவர்கள் கூறியவாறு அந்த அலுவலகம் சென்று பார்த்தபோது மேற்கூறப்பட்ட இரு நபர்களும் இல்லை. அலுவலக உதவியாளர் பாலாஜி அவர்கள் மட்டும் இருந்தார். நான் SP வேலுமணி அனுப்பியதாக சந்திரசேகர் மற்றும் வினோத் அவர்களை பார்க்க வேண்டும் என்று கூறினேன், அதற்கு அலுவலக உதவியாளர் பாலாஜி அண்ணனை தொடர்பு கொள்ள முடியாது. அண்ணன் என்னை தொடர்பு கொண்டால் நீங்கள் வந்ததாக கூறுகிறேன் என்று கூறினார். நான் உதவியாளர் தேவராஜ் எண்ணில் அழைத்து அலுவலகத்தில் சந்திரசேகர் மற்றும் வினோத் இருவரும் இல்லை என்று கூறினேன். அவர் பதிலுக்கு பாலாஜியிடம் பேசிவிட்டு நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறினார்.
நான் என் வீட்டிற்கு செல்லும்போது 10 நிமிடத்தில் சந்திரசேகர் அவர்கள் எனது அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு நீங்கள் நாளை 12.07.2021 உங்களை ரேஸ் கோர்ஸில் சந்திப்பதாக கூறினார். னும் அதன்படி வருவதாக கூறினேன். 12.07.2021 உதவியாளர் வினோத் என்னை தொடர்பு கொண்டு திருச்சி ரோட்டில் உள்ள ஆலையம் அறக்கட்டளை அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்.
நான் நேரில் சென்றேன் என்னையும் வினோத்தையும் வைத்து ஒரு சில நாட்களில் பணம் கொடுப்பதாக SP.வேலுமணி கூறியுள்ளார் என்று கூறினார்கள். உங்களை நான் 15.07.2021 அன்று அழைப்பதாக கூறினார். இதுவரை என்னை அழைக்கவில்லை என்னுடைய அலைபேசி என்னை அவர் Block செய்துவிட்டார்.
பின்பு கடந்த 17.07.2021 அன்று உதவியாளர் வினோத் என்னை பலமுறை அலைபேசியில் அழைத்து இன்று உங்களை நான் சந்திக்கிறேன் என்று கூறினார். பின்பு சுமார் 6 மணிக்கு RSPURAM காப்பி டே வருமாறு கூறினார். நானும் எனது சகோதரர் ஆன ரத்தினவேலும் சென்றோம், என்னை வினோத் கைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்று கேட்டார், நானும் காபி டே முன்பு காரில் உள்ளோம் என்று தெரிவித்தோம். அதற்கு நாங்கள் வந்த கார் பதிவு என்னை தெரிவிக்கச் சொன்னார். அதன்படியே காரின் பதிவு என்னை தெரிவித்தேன் . உங்களுடன் வந்திருக்கும் உங்கள் சகோதரரை காரிலே இருக்குமாறும் என்னை மட்டும் இறங்கி காபி டே முன்பு வருமாறு கூறினார்.பின்பு என்னை அவருடைய புல்லட் இருசக்கர வாகனத்தில் என்னை மட்டும் அழைத்துக்கொண்டு R.S.PURAM அன்னப்பூர்ணா ஹோட்டல் அருகில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற போது முன்னாள் அமைச்சர் SP.வேலுமணி மற்றும் உதவியாளர் பார்த்திபன் இருந்தார், பார்த்திபன் மற்றும் வினோத் என்னிடம் இவ்வளவு நாட்கள் கழித்து பணத்தை கேட்கிறீர்களே என்று உரக்க மிரட்டி பேசினார்கள். அவர்கள் எனக்கு கொடுப்பதாக இருந்த பணியையும் கொடுக்காமல் அதற்கான பணத்தையும் கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள் என்று முறையிட்டதற்கு, அவர்கள் நாங்கள் பணத்தை கொடுக்கின்றோம், நீங்கள் பொறுத்து இருங்கள் எங்களை அவசரப்படுத்தினால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தி விட்டு , நீங்கள் நாளை சென்று முன்னாள் அமைச்சர் SP. வேலுமணி சென்று பாருங்கள் என்று கூறிவிட்டு என்னை அழைத்து சென்ற இடத்திலேயே விட்டு விட்டு சென்றுவிட்டார்கள். நான் 19.07.2021 அன்று முன்னாள் அமைச்சர் SP. வேலுமணி இல்லத்தில் காலை சுமார் 11 மணியளவில் சந்தித்த போது பார்த்திபன் மற்றும் வினோத் அவர்களை சந்தித்ததை பற்றி கூறினேன், அதற்கு SP. வேலுமணி இனிமேல் என்னிடம் நீ கொடுத்த பணம் சம்பந்தமாக என்னை சந்திக்க வரக்கூடாது என்று என்னை கடுமையாக பேசி அதற்கு மேல் மீறி வந்து பணம் கேட்டால் உன்னையும் உன் குடும்பத்தையும் அழித்து அட்ரஸ் இல்லாமல் தொலைத்து விடுவேன் என்றும் எனது செல்வாக்கு என்னமென்று உனக்கு தெரியுமல்லவா என்று என்னை மிரட்டி அனுப்பி விட்டார். இது சம்பந்தமாக பல்வேறு குறுஞ்செய்தி மற்றும் பேச்சு பதிவு மற்றும் பிற ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
கனம் ஐயா அவர்கள் எனக்கு சிவில் ஒர்க்ஸ் ஒப்பந்தம் தருவதாக பொய்யுரைத்து என்னிடம் ஏமாற்றி பெற்றுக் கொண்ட பணம் ரூ.1,25,00,000/- ( ரூபாய் ஒரு கோடியே இருபத்து ஐந்து லட்சம் மட்டும் ) யை பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் SP.வேலுமணி அவர்களையும் மற்றும் அவருடைய உதவியாளர் பார்த்திபன், வினோத் ஆகியோர் மீது என்னை ஏமாற்றியது தொடர்பாகவும் என்னையும் எனது குடும்பத்தையும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தருமாறும் எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கும் படியும் தாங்களை பணிவுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button