09-08-21 தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலில் திருக்கோயில் மேம்பாடு குறித்து இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, இத்திருக்கோயில் மற்றும் அருள்மிகு வைகுண்டப் பெருமாள் வகையறா திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 8 ஏக்கர் நிலத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பயணிகள் நிழற்குடை அமைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினோம். மேலும் திருக்கோயிலை தூய்மையாக பராமரித்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தருமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினோம்.*
*இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் திரு.@thamoanbarasan, அறநிலையத்துறை ஆணையாளர் திரு.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆர்த்தி, ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்வபெருந்தகை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்..!