தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு தென்கிழக்கு திசையில் எட்டயபுரம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இன்று மாலை 3.17 மணி நிலவரப்படி கோவில்பட்டியில் இருந்து 17 கிமீ தொலைவிலும் எட்டயபுரத்தில் இருந்து 7 கிமீ தொலைவிலும் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தனியார் அமைப்பு தகவல்
ஆனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நிலநடுக்கம் பற்றி தாங்கள் உணரவில்லை என்று கூறியுள்ளனர்.அரசு அதிகாரிகளும் அது போன்ற எவ்வித தகவலும் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.