செய்திகள்டிரெண்டிங்
Trending

அரசு பணியில் ஓய்வு பெறும் வயது மீண்டும் குறைப்பு? அதிர்ச்சி தகவல்கள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் குறைக்கப்பட உள்ளதாகவும், செட்டில்மெண்ட் தொகையை காலம் தாழ்த்தி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

தமிழ்நாட்டின் நிதி நிலைமை கடும் தள்ளாட்டத்தில் உள்ளது என்பது கடந்த ஆட்சியின் போதே தெரியவந்தாலும் இவ்வளவு மோசமாக இருப்பதை வெள்ளை அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
கடந்த அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை எடுத்துக்காட்டும் விதமாகவும், தங்களுக்கு இருக்கும் சவால்களை காட்டும் விதமாகவும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டாலும் பீதியில் இருப்பது என்னவோ பொது மக்கள் தான்.

இந்த மோசமான நிதி நிலைமையை சரி செய்ய தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை, போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தப் போகிறதா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் எப்படி ஒட்டுமொத்த விலைவாசியும் உயர்கிறதோ, அதேபோல் மின்சாரம், போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்தாலும் உடனடியாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிடும். இதனால் சாமானிய மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

இதில் முக்கியமாக அரசு ஊழியர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். பணி ஓய்வின் போது கொடுக்கவேண்டிய செட்டில்மெண்ட் தொகையை வழங்க வழியில்லாமல், அதிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்வதற்காக முந்தைய அதிமுக அரசானது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59ஆகவும், அடுத்த சில மாதங்களில் 60ஆகவும் உயர்த்தியது. உறுதியாக ஆட்சிக்கு வரமாட்டோம் என்று கருதியதாலா, அல்லது ஒருவேளை வந்தால் அப்படியே 65 வரை நீட்டித்துக் கொள்ளலாம் என்று நினைத்தோ அதிமுக அரசு வயது வரம்பை கூட்டி உத்தரவிட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை கூடுதலாக இரு ஆண்டுகள் வேலை இருக்கிறது என்பது ஆறுதலான விஷயம். அதே சமயம் திமுக அரசு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்த்தார்கள். அது குறித்து விவரங்களும் துறை ரீதியாக கேட்கப்படுகிறது. ஆனால் இப்போதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.
கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்கு டிஏ நிறுத்தப்பட்டது. லீவ் சரண்டர் ரத்து செய்யப்பட்டது. அதே போல் விடுப்பு பயணச் சலுகையும் நிறுத்தப்பட்டது. இவ்வாறு பல்வேறு பலன்களை அரசு ஊழியர்கள் இழந்துள்ளனர்.
இந்த சூழலில் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு மீண்டும் 58ஆக குறைக்க உள்ளதாகவும், ஓய்வு பெறும் போது வழங்க வேண்டிய செட்டில்மெண்ட் தொகையை இரு ஆண்டுகளுக்குப் பின்னர் பெற்றுக்கொள்ளும் வகையில் பத்திரம் வழங்கப்படும் என்றும் ஒரு தகவல் வெளியாகி அரசு ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தின் நிதி நிலைமையை சரி செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேல் ஏற்பட்ட பாதிப்புகளையும், இழந்த வருவாயையும் ஓரிரு மாதங்களில் சரி செய்துவிட முடியாது. இதை சரிகட்ட அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன, அதில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தொழில் நடத்துவோர் எந்த அளவு பாதிக்கப்படப் போகின்றனர் என்பது இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button