தூத்துக்குடியில் அமைச்சர் சகோதரர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதாக தகவல்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளத்துறை அமைச்ச ருமான அனிதா ராதாகிருஷ்ணன் இவரது சகோதரர் டாக்டர் சுதா ஆனந்தன் தூத்துக்குடியில் உள்ள கேடிசி நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவரது சொந்த கிராமமான தண்டுபத்து கிராமத்தில் உள்ள கோவில் விழாவிற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார் இந்த நிலையில் இன்று காலை அவரது டிரைவர் வீட்டிற்கு வழக்கம்போல் வந்துள்ளார் அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு உள்ள இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனடியாக டாக்டர் சுபாஆனந்தனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேலும் சிப்காட் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த போலீசார் வீட்டை சோதனை செய்தனர் அப்போது வீட்டிலுள்ள பீரோல் தங்க நகைகள் வைக்கும் லாக்கர் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது உடனடியாக கை ரேகை கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது கிராமத்துக்கு சென்று இருந்த சுதா ஆனந்தன் வரவழைக்கப்பட்டு அவரிடம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் பணம் வெள்ளி பொருள்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பின்பு வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வெள்ளி கொள்ளை போனது என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். தூத்துக்குடியில் அமைச்சர் சகோதரர் வீட்டில் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது