இரு தினங்களில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அனுமதியோடு விரைவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பேன்-முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர். மட்டுமில்லாமல் ரெய்டு நடந்து வரும் வீடுகள் முன்னாள் அதிமுகவினர் சூழ்ந்து கொண்டு ரெய்டு நடவடிக்கைக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை திடீரென சென்னை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அங்கிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானத்தில் ஏறி . தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கிய அவர், அங்கு ரெடியாக நின்ற காரில் ஏறி கிளம்பியுள்ளார். அவருடைய கார் திருச்செந்தூர் நோக்கி சென்றது என்று சிலரும், திருநெல்வேலி நோக்கி சென்றது என்று சிலரும் தேடி வந்தனர்ஃ. சத்ரு சம்ஹார பூஜைக்காக திருச்செந்தூருக்கு சென்றிருப்பாரா? அங்கே வழிபாட்டிற்கு இன்றுஅனுமதி இல்லை என்பதால் அங்கு செல்லாமல் வேறு எங்காவது தங்கினாரா? அல்லது அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தென்காசி போன்ற இயற்கை நிறைந்த பகுதிக்கு சென்றாரா என்று கோணத்தில் இன்று காலை முதல் பத்திரிக்கையாளர்கள் மற்றும் உளவுதுறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மதியம் சென்னை செல்லும் விமானத்தில் அவர் பயணிக்க டிக்கெட் எடுக்கப்பட்டு இருப்பதை அறிந்த பத்திரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். பத்திரிக்கையாளர்கள் மற்றும் உளவுதுறையினர் எதிர்பார்த்தது போல சென்னை செல்லும் விமானத்தில் பயணிக்க கார் மூலமாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு எஸ்பி வேலுமணி வந்தார். அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுப்பதை தவிர்த்து விட்டு விமான நிலையம் உள்ளே செல்ல முயற்சி செய்தார்.
பத்திரிக்கையாளர்களின் தொடர் முயற்சி காரணமாக அவர் ஒருசில வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். அப்போது அவர் பேசுகையில் நேற்று கோவிலுக்கு வருவதாக இருந்தேன் இந்த சம்பவம் காரணமாக வரமுடியவில்லை தலைவர்கள் அனுமதியோடு விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இருக்கும் தலைவர்கள் அறிக்கை அளித்து இருக்கின்றனர் இரு தினங்களில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அனுமதியோடு விரைவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பேன் என்றார்.