தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மதுரையில் அதிகளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்ததையடுத்து கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் மதுரை நேதாஜி ரோடு பகுதியில் காவேரி மஹால் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், செல்லூர் சேர்ந்த ஜோதி பாசு, அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர், முனிச்சாலை பகுதியை சேர்ந்த ரவி ஆகியோர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர் அவர்களை திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்களை கைது செய்த போலீசார்
அவர்களிடமிருந்து சில வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் பணம், 7 செல்போன்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.