ஆப்கானிஸ்தானை எப்படியாவது தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தலிபான்கள் கடும் தாக்குதல் தொடுத்து வருகின்றனர், இதற்கிடையே ஆப்கான் ராணுவத்துக்கு இந்தியா பரிசாக அளித்த Mi-24 என்ற ராணுவ தாக்குதல் ஹெலிகாப்டரை தாங்கள் பிடித்து விட்டோம் என்று தலிபான்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

ஆப்கானின் கண்டூஸ் பகுதியில் தலிபான்கள் இந்த இந்தியா பரிசளித்த ராணுவத் தாக்குதல் ஹெலிகாப்டருக்கு அருகில் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால் ஹெலிகாப்டரின் ரோட்டார் பிளேடுகளைக் காணவில்லை. ஒருவேளை தலிபான் கட்டுப்பாட்டுக்குள் இந்த இந்திய தாக்குதல் ஹெலிகாப்டர் வந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாதபடிக்கு பிளேடுகள் உடைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
2019-ல்தான் இந்தியா ஆப்கானிஸ்தான் ராணுவப் படைக்கு Mi-24 தாக்குதல் ஹெலிகாப்டர்களை வழங்கியது. இதோடு மூன்று சீட்டா லைட் ஹெலிகாப்டர்களையும் இந்தியா அளித்தது.
2015-ல் ஆப்கானுக்கு அளிக்கப்பட்ட ராணுவத் தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக, பதிலியாக 2019-ல் இந்த அட்டாக் ஹெலிகாப்டரை இந்தியா வழங்கியது.
இந்திய ஹெலிகாப்டர் பிடித்து வைத்த சம்பவம் ஆப்கான் படைகளின் இயலாமையையும் அரசின் பலவீனத்தையும் காட்டுகிறது. இப்போது தலிபான்கள் 65% இடங்களை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் போலீஸ் தலைமைச் செயலகத்தையும் தலிபான்கள் நேற்று கைப்பற்றினர். மாகாண தலைநகரங்களின் ராணுவ தலைமையிடங்கள் சிலவற்றையும் தலிபான்கள் கைப்பற்றினர்.
இந்தச் சண்டையினால் ஆயிரக்கணக்கானோர் குழந்தைகளுடனும் பெண்களுடனும் புலம் பெயர்ந்து வருகின்றனர்.