தமிழக பட்ஜெட் 2021-2022-ஐ நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. அத்துடன் தமிழகத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் காகிதமில்லா பட்ஜெட்டும் இதுவே.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்நிலையில் காலை 10 மணி அளவில் சட்டப்பேரவைக்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் வெளியிட்ட முக்கிய அம்சங்கள்
1:58 PM
தமிழக நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்
1:07 PM
வில்லங்க சான்றிதழ்களை இனி 1950 முதல் இணையதளத்தில் பார்வையிடலாம்
1:02 PM
பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
1:02 PM
நிலுவையில் உள்ள ரூ28,000 கோடி வசூலிக்க சமாதான் திட்டம்
12:56 PM
நடப்பு நிதியாண்டு வருவாய் பற்றாக்குறை ரூ 58,692.68 கோடி
12:54 PM
விழுப்புரம் மாவட்டத்தில் சிப்காட்- வானூர் வட்டம் திருச்சிற்றம்பலத்தில் டைடல் பார்க்- பட்ஜெட் அறிவிப்புக்கு ரவிக்குமார் எம்.பி. நன்றி
12:51 PM
தமிழக அரசின் வரிகுறைப்பால் பெட்ரோல் விலை தமிழகத்தில் மீண்டும் ரூ100க்கு கீழே குறைய வாய்ப்பு
12:47 PM
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் – நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
12:46 PM
பெட்ரோல் மீதான வரி குறைப்பால் ரூ1,160 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும்
12:46 PM
தமிழகத்தில் 2 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன
12:45 PM
பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ3 குறைப்பு
12:43 PM
கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற ரூ2756 கோடி கடன் தள்ளுபடி
12:43 PM
உரிய விசாரணைகளுக்குப் பின் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு செயல்படுத்தப்படும்
12:41 PM
அதிமுக ஆட்சியின் பயிர் கடன் தள்ளுபடியில் நிறைய குளறுபடிகள்- முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன
12:40 PM
அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ5 லட்சமாக உயர்வு
12:39 PM
குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 வழங்கும் திட்டத்துக்கு குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவை இல்லை
12:35 PM
இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுக்கு ரூ225 கோடி ஒதுக்கீடு
12:34 PM
அனைத்து தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும்
12:32 PM
தொழில்நிதி உதவி திட்டத்தின் கீழ் 7,000 சிறுபான்மையினர் பயன் பெற நடவடிக்கை
12:31 PM
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 2 மகளிருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டது
12:28 PM
மசூதிகள், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ6 கோடி நிதி ஒதுக்கீடு
12:28 PM
ஆதி திராவிடர்- பழங்குடியினர் நலனுக்கு ரூ4142 கோடி நிதி ஒதுக்கீடு
12:27 PM
மாற்றுத் திறனாளிகள் ஒரு உதவியாளருடன் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி
12:21 PM
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கு ரூ2356 கோடி நிதி ஒதுக்கீடு
12:21 PM
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்துக்கு ரூ1725 கோடி ஒதுக்கீடு
12:18 PM
3-ம் பாலினத்தவர் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ1.5 கோடி ஒதுக்கீடு
12:17 PM
திருமண நிதி உதவி திட்டத்துக்கு ரூ762 கோடி நிதி ஒதுக்கீடு
12:14 PM
300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்; சுற்றுலாதுறைக்கு ரூ187 கோடி நிதி ஒதுக்கீடு
12:14 PM
29 துறைகளின் 600 சேவைகள் இ-சேவையில் வழங்கப்படும்
12:12 PM
பழனி முருகன் கோவில் மூலம் சித்த மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்
12:11 PM
12959 திருக்கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த ரூ130 கோடி நிலை நிதி
12:10 PM
100 நாட்களில் ரூ600 கோடி மதிப்பிலான 161.702 கிரவுண்ட் காலி மனைகள் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துகள் மீட்பு
12:09 PM
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இலவச பள்ளி சீருடைகளை நெசவாளர்கள் தயாரிக்க ரூ409 கோடி ஒதுக்கீடு
12:09 PM
அரசு ஊழியர்களின் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 ஆக உயர்வு
12:08 PM
பொங்கல் திருநாளை முன்னிட்டு 1.88 கோடி இலவச வேட்டி- சேலைகள்; ரூ490 கோடி ஒதுக்கீடு
12:08 PM
துணிநூல் துறைக்கு தனி இயக்குநரகம் உருவாக்கப்படும்
12:08 PM
அரியலூர் -பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ10கோடியில் புவியியல் புதைவடிவ பூங்கா
12:05 PM
சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நீடித்த நிலையான சுரங்க கொள்கை உருவாக்கப்படும்
12:03 PM
சிறு, குறு தொழில் சிக்கல்களை ஆராய குழு அமைக்கப்படும்
12:02 PM
ரூ165 கோடியில் 2 நிதிநுட்ப நகரங்கள் உருவாக்கப்படும்- நிதிநுட்ப கொள்கை வெளியிடப்படும்
12:01 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சார வாகன உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்
12:01 PM
பின்தங்கிய 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும்
12:00 PM
ஓசூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை; தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
12:00 PM
ரூ225 கோடியில் கோவையில் 500 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா
11:57 AM
விழுப்புரம், வேலூர், திருப்பூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்
11:56 AM
தூத்துக்குடியில் ரூ4,500 கோடியில் சர்வதேச அறைக்கலன் தயாரிப்பு பூங்கா
11:55 AM
திருவள்ளூர் மாவட்டத்திம் மின்கல பூங்கா, பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும்
11:53 AM
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்
11:52 AM
நெய்வேலியில் என்.எல்.சி.யுடன் இணைந்து புதிய தொழிற் பயிற்சி நிலையம்
11:52 AM
அமைப்பு சாரா நல வாரியத்துக்கு ரூ215 கோடி நிதி ஒதுக்கீடு
11:51 AM
தமிழ்நாடு சித்தா பல்கலைக் கழகம் அமைக்க முதல் கட்டமாக ரூ2 கோடி ஒதுக்கீடு
11:51 AM
மருத்துவம், குடும்ப நலத்துறைக்கு மொத்தம் ரூ18933 கோடி நிதி ஒதுக்கீடு
11:50 AM
முதலமைச்சர் காப்பீடு திட்டத்துக்கு ரூ1046 கோடி ஒதுக்கீடு
11:50 AM
தமிழ்நாடு சித்தா பல்கலைக் கழகம் அமைக்கப்படும்
11:48 AM
இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1,303 ஆக உயர்த்தப்படும்
11:48 AM
முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ509.56 கோடி
11:48 AM
ஒருநாளைக்கு 2.4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே வருகிறது
11:42 AM
உயர் கல்வி துறைக்கு ரூ5369 கோடி நிதி ஒதுக்கீடு
11:42 AM
அண்ணா பல்கலை.யுடன் இணைந்து ஆளில்லா விமான கழகம் தொடங்கப்படும்
11:42 AM
ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்
11:39 AM
நடப்பாண்டில் புதியதாக 10 கலை, அரசு கல்லூரிகள் தொடங்கப்படும்
11:39 AM
865 மேல்நிலைப் பள்ளிகளில் ரூ20 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும்
11:38 AM
8 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்விக்கு ரூ66 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம்
11:36 AM
மாநிலங்களிடையே கல்வியில் முதல் 3 இடங்களுக்கு தமிழகத்தை கொண்டு வர நடவடிக்கை
11:35 AM
பள்ளி கல்வித் துறைக்கு ரூ32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு
11:33 AM
தனித்துவமான தமிழ்நாட்டுக்கான தனி கல்வி கொள்கையை உருவாக்க வல்லுநர் குழு
11:32 AM
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்டவைகளுக்கான மானியமாக ரூ19,872.77 கோடி
11:31 AM
2,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிசந்தையில் இருந்து வாங்குகிறது தமிழகம்
11:30 AM
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும்
11:29 AM
மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது
11:28 AM
தமிழகம் மின்மிகை மாநிலம் என்கிற கூற்று தவறானது- நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
11:27 AM
2026-ம் ஆண்டு டிசம்பருக்குள் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டம் முடிக்கப்படும்
11:27 AM
கோவை மெட்ரோ ரயில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
11:27 AM
மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்படும்
11:25 AM
நெடுஞ்சாலை துறைக்கு ரூ17,899 கோடி நிதி ஒதுக்கீடு
11:25 AM
சென்னை மெட்ரோ ரயில்-2ம் திட்ட கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடக்கம்
11:24 AM
1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ623.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:23 AM
பெண்கள், மாற்றுத் திறனாளிகள், 3-ம் பாலினத்தவர் பயண சலுகைக்கு ரூ703 கோடி மானியம்
11:21 AM
59 நகராட்சிகளில் புறவழிச் சாலைகள் அமைக்க முன்னுரிமை
11:21 AM
சென்னை- கன்னியாகுமரி இடையேயான சாலையை 6 வழி, 8 வழி சாலைகளாக்க வலியுறுத்தப்படும்
11:20 AM
மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரில் பெருநகர குழுமங்கள் அமைக்கப்படும்
11:18 AM
குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ3,954 கோடி நிதி ஒதுக்கீடு
11:17 AM
10 ஆண்டுகளில் குடிசைகள் அற்ற மாநிலமாக விளங்குவதில் அரசு உறுதி
11:16 AM
நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டங்களுக்கு ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு
11:16 AM
சென்னை தெற்கு உஸ்மான் சாலையில் ரூ1300 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்
11:14 AM
சீர்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ2350 கோடி ஒதுக்கீடு
11:14 AM
கொசஸ்தலை ஆற்றில் ரூ87 கோடியில் வெள்ள நீர் வடிகால்
11:12 AM
சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்
11:12 AM
திருச்சியில் புதியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் அமைக்கப்படும்
11:12 AM
ரூ1,000 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்
11:12 AM
கலைஞர் கருணாநிதி பெயரில் ரூ100 கோடியில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படும்
11:09 AM
1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள்
11:07 AM
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்
11:04 AM
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ3 கோடியாக மீண்டும் வழங்கப்படும்
11:04 AM
தமிழக பட்ஜெட் 2021-22 LIVE: ரூ100 கோடியில் மீண்டும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
11:04 AM
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தவும் ஊதியத்தை ரூ300 வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்தும்
11:01 AM
கிராமங்களில் 8,03,924 ஏழைகளுக்கு 5 ஆண்டுகளில் வீடுகள் கட்டித்தரப்படும்
11:01 AM
கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ3548 கோடி ஒதுக்கீடு
11:00 AM
2021-22-ல் ரூ8017 கோடி செலவில் சுமார் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்
11:00 AM
கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு 5 ஆண்டுகளில் வீடுகள் கட்டித்தரப்படும்
10:57 AM
79395 குக்கிராமங்களில் ஒருநபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை