பெரும்பாக்கத்தில் கடையில் வேலை பார்த்த இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மாஸ்க் அணியவில்லை என சபீரை (18) என்பவரை பூட்ஸ் காலால் உதைத்த பெரும்பாக்கம் எஸ்.ஐ ஜான்போஸ்கோ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கறிக்கடை ஊழியரை, போலீசார் பூட்ஸ் காலால் மிதித்து, சித்தரவதை செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோவும், மற்றொரு காவலரும், பெரும்பாக்கம் நேதாஜி நகர் பகுதியில் உள்ள கோழிக்கறி கடைக்கு சென்று, கடை ஊழியரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கடை ஊழியரின் காலை பூட்ஸ் காலால் மிதிக்கும் போலீசார், அவரது கால் மீது ஏறி நின்று கொடூரமாக தாக்கி, பூட்ஸ் காலால் உதைத்து, துன்புறுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடை ஊழியர் முகக்கவசம் அணியாததால் நடவடிக்கை எடுத்ததாக போலீசார் கூறும் நிலையில், போலீசாரின் கொடூர செயலை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.ஐ ஜான்போஸ்கோ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யபட்டுள்ளர்.
செய்தியாளர் ரமேஷ்