செய்திகள்டிரெண்டிங்
Trending

பனை வெட்ட தடை விதித்த 24 மணிநேரத்திற்குள் வெட்டப்பட்டு கிடக்கும் பனைகள்

பட்ஜெட்டில் பனைகளை வெட்ட தடை விதிக்கப்பட்ட மறுநாளே தென்காசி மாவட்டம் கடையத்தில் செங்கல் சூளைகளுக்கு லாரிகளில் பனைகள் வெட்டப்பட்டு கடத்திச் செல்லும் கொடூரம் நடந்திருக்கிறது. கட்டேறிப்பட்டி ரயில்வே கேட் அருகில் பச்சை பனைமரம் இன்று காலை வெட்டி சாய்க்கப்பட்டிருக்கிறது. அரசு உத்தரவை மீறி இந்த அத்துமீறல் செயலில் ஈடுபட்டவர்கள் மீது வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பனைமர ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button