லெஸ் கெயெஸ்-ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 1297 பேர் பலியானதுடன், 2,800க்கும் மேலானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வட அமெரிக்க கண்டத்தின் கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான ஹைதியின் தெற்மேற்கு பகுதியில், நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மரண ஓலம்ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கடற்கரை நகரமான லெஸ் கெயெஸ் கடும் சேதத்திற்கு ஆளானது.வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினர். நகரம் முழுதும் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. அங்கு, 860க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்தன; 700க்கும் மேலானவை கடும் சேதம் அடைந்தன.
அருகருகே இருந்த வீடுகள் ஒன்றின் மீது ஒன்றாக வரிசையாக சரிந்து விழுந்த, ‘வீடியோ’ வெளியாகி மனதை பதற வைத்தது. பள்ளி, தேவாலயம், மருத்துவமனை, அரசு அலுவலகம், ஓட்டல் உட்பட பல கட்டடங்களும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மரண ஓலம் எழுப்பினர். எங்கு பார்த்தாலும் உதவிக்குரல்கள் கேட்டன. பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய ஹைதியில் கொரோனா பரவல், அதிபர் படுகொலை போன்ற துயரங்களை அடுத்து, நிலநடுக்கம் பேரிடியாக மாறி உள்ளது. மீட்பு பணிகள் உடனடியாக துவங்கிய நிலையில், நேற்று இரவு வரை பலி எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துஉள்ளது;
2,800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். எனினும் 700க்கும் அதிகமானோர் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியின்றி மக்கள் தவிக்கின்றனர். பலரும் அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். வெப்ப மண்டல புயல்வீடற்ற ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் தங்கி உள்ளனர். நாடு முழுதும் ஒரு மாத அவசரநிலையை பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார்.’மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சேதத்தின் அளவு தெரியும் வரை பிற நாடுகளிடம் உதவியை கேட்பதில்லை’ என, பிரதமர் கூறி உள்ளார்.இன்று அல்லது நாளை, ஹைதியை வெப்ப மண்டல புயல் தாக்கக்கூடும் என, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.