மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யனகவுண்டன்பட்டி நடுத்தெருபகுதியை சேர்ந்தவர் அருண்குமார் இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகின்றார்.
இவருக்கும் அவரது மனைவி ஜெயபிரதாவுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இதில் 10 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில்
கூடுதல் வரதட்சணை பணம் மற்றும் தங்கநகைகள் கேட்டு தினமும் மனைவியுடன் கணவர் அருண்குமார் சண்டையிடுவது வழக்கம் என கூறப்படுகிறது
இந்த நிலையில் இன்று மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் கோபமடைந்த அருண்குமார் , அடுப்பில் இருந்த சூடான கொதிக்கும் பாலை எடுத்து மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
படுகாயத்துடன் அலறி துடித்து உயிருக்கு போரடிய ஜெயபிரதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மனைவி ஜெயபிரதா அளிந்த புகாரின்பேரில் கொதிக்கும் பாலை ஊற்றி காயப்படுத்திவிட்டு தலைமறைவான அருண்குமாரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி கொதிக்கும் பாலை மனைவி மீது ஊற்றி கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.