திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் மதுபோதையில் மனைவி தாக்கிய கனவரை மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மனியாச்சியை சேர்ந்த அருணாச்சலம்(45).இவருக்கும் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள்(33).என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் குலசேகரன்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். அருணாச்சலம் காயல்பட்டணத்தில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான அருணாச்சலம் மது போதையில் அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவதுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று இரவு அருணாச்சலம் மனைவி பேச்சியம்மாளிடம் மதுபோதையில் சண்டை போட்டுள்ளார். மேலும் அவர் கையை கடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேச்சியம்மாள் அருணாச்சலத்தை கழுத்தை நெறித்து கொலை செய்யதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் பேச்சியம்மாள் அவரது தாயார் சுடலைவடிவு ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.