சமீபகாலமாக நகரங்கள் கிராமங்களில் நமது இளைஞர்களின் கையில் கஞ்சா சர்வ சாதாரணமாக புலங்குகிறது திட்டமிட்டே நமது வருங்கால தலைமுறை குறிவைக்கப் படுகிறார்களோ எனத் தோணுகிறது.
கஞ்சா வியாபாரிகளின் இலக்கு இளைஞர்கள், மாணவர்கள் தான். ஒருமுறை இதற்கு பழக்கப்படும் மாணவர்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மாணவர்களின் சிந்தனை சீரழிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். இந்த பாதிப்பு நாளடைவில் வன்முறையாகவும் வளர்கிறது. சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கொலைகளுக்கு கஞ்சா முக்கிய காரணமாக உள்ளது.
கஞ்சா போதைக்கு அடிமையாகும் சில மாணவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கஞ்சா வியாபாரிகள், அவர்களுக்கு கமிஷன் கொடுப்பது, சில பாக்கெட்கள் இலவசமாக கொடுப்பது என்று தங்களுடைய வியாபாரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
அனைத்தூ மக்களும் விழித்துக் கொள்ளவேண்டிய காலகட்டம் இது.
செய்திகள் : ரஃபீக் பின் அன்ஸாரி