ஐபிஎஸ், ரயில்வே பாதுகாப்பு படை, அசாம் ரைபிள், எல்லை பாதுகாப்பு படை, டெல்லி காவல்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடைய அறிவியில், சைபர் பிரிவு உள்ளிட்ட பரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், ஏற்கனவே அந்த பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பானது பரிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் புதிதாக எந்த ஒரு மாற்றுத்திறனாளிகளும் மத்திய பாதுகாப்பு படைக்கோ, அல்லது டெல்லி, அந்தமான் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் பாதுகாப்பு பணிக்கோ புதிதாக மாற்றுத்திறனாளிகள் யாரும் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பையும் அதிகாரப்பூர்வ அரசாணையாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது.