தூத்துக்குடி வி.வி டைட்டானியம் பிக்மெண்ட் என்ற தனியார் நிறுவனம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ளது. மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முள்ளக்காட்டில் உள்ளது. இந்த குடோனை கடந்த 2017ம் வருடம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தாதுமணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் திரு. ராஜேஷ்கண்ணா (49) மற்றும் வருவாய் துறையினருடன் தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள வி.வி டைட்டானியம் கம்பெனி முன்பு சோதனை செய்தபோது, ஒரு லாரியில் 9 மூட்டைகளில் 9 டன் இல்மனைட் தாதுமணல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திரு. ராஜேஷ்கண்ணா அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சண்முகம் தலைமையிலான போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியின் ஓட்டுனர்கள் மீதும், தூத்துக்குடி வி.வி டைட்டானியம் கம்பெனியின் உரிமையாளர் மற்றும் அத்துடன் தொடர்புடையவர்கள் ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.*
*இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு அவர்களுக்கு உத்தரவிட்டார்.*
*அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் தலைமையிலான போலீசார் 5 லாரிகளின் ஓட்டுநர்களான தூத்துக்குடி செக்கடி தெருவை சேர்ந்த வெள்ளசாமி மகன் 1) இசக்கி (49), தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த நடராஜன் மகன் 2) மாரிமுத்து (39), தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த பட்டறைசாமி மகன் 3) முருகன் (39), தூத்துக்கு சண்முகபுரம் பகுதியை சேர்ந்த அய்யாக்குட்டி மகன் 4) சடையாண்டி (39), ஆத்தூர் பரதர் தெருவை சேர்ந்த சூசை மகன் 5) செல்வம் (59) மற்றும் மேற்படி முள்ளக்காடு குடோனின் மேற்பார்வையாளரான கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்த சுயம்பு மகன் 6) ராமகிருஷ்ணன் (41) ஆகிய 6 பேரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 லாரிகள் மற்றும் 39 டன் இல்மனைட் தாதுமணலையும் பறிமுதல் செய்தனர். பின் மேற்படி குடோனை தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*