கொரோனா தொற்று பரவலை குறைக்கும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த முறை ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி,
செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டயப் படிப்புகளுக்கும் சுழற்சி முறையில் கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாடு திறம் மேம்பாட்டுக் கழகம், மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50% பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் அனுமதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அங்கு பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உயிரியல், தாவரவியல் மற்றும் படகு இல்லங்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கலாம் என்றும் தெரிகிறது.
நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளுக்கு பயிற்சியாளர்களுடன் 50% இயங்கலாம் என்றும் கூறப்படலாம் எனத் தெரிகிறது.
தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது.