இல.கணேசன் நியமனம்!
மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மணிப்பூர் ஆளுனராக தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யான இல. கணேசன் பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார்.
31 ஆண்டுகளாக பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கும் இல.கணேசன், இடையில் தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக உள்ளார்