சென்னை தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மாநகராட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியை நினைவூட்டும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 382-வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சென்னை மாநகராட்சி நிர்வாகம் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இந்த நாளை போற்றும் விதமாக சென்னை மாநகராட்சி அலுவலகம், கடற்கரை சாலை, நேப்பியார் பாலம் போன்றவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.