கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடிச்சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
|
கோவை மாவட்டம்,ஆனைமலை பகுதியில் ஜாகிர் ஹூசேன் என்பவர் வசித்து வருகிறார்.
21.08.2021
அன்று இரவு ஆட்டோவை தனது வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் (22.08.2021) அவர் வந்து பார்த்தபோது அவர் நிறுத்தி விட்டுச் சென்ற ஆட்டோவை காணவில்லை.
மேற்படி ஆனைமலை காவல் நிலையத்தில் ஜாகிர் ஹூசேன் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆனைமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்கள் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை
மேற்கொண்டனர்.
தற்போது ஆட்டோவை திருடிச் சென்ற சதாம் ஹூசேன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவன் தொடர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உடையவன் என்பதும் தெரியவந்தது.