எஸ்.கைலாசபுரம் கிராமத்தில் சிமெண்ட் ஆலை அமைந்தால் நீர். நிலம். காற்று மாசுபடும் அபாயம் உள்ளதாக கூறி அப்பகுதி கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் இதுகுறித்து அவாகள் கூறுகையில், எஸ்.கைலாசபும் கிராமத்தில் பொதுமக்கள் வசித்து வரும் பகுதித்கு மிகவும் அருகில் ஜேசன் இன்ப்ரோ என்ற தனியார் நிறுவனம் (JASAN INFRA P Ltd) பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கான கருத்துக் கேட்புக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 12ம் தேதி எஸ்.கைலாசபுரம் கிராமத்தில் வைத்து நடைபெற்றபோது ஒட்டுமொத்த கிராம மக்களும் சிமெண்டு ஆலை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் எஸ்.கைலாசபுரம் கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 700 மாணவர்கள் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து வந்து கல்வி கற்கிறார்கள், இத்தொழிற்சாலை அமையவிருக்கும் இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அருகிலுள்ள கிராமத்திற்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் குடிநீர் விநியோகிக்கப்படும் நீரோற்று நிலையம் உள்ளது. ஆலை அமைந்தால் 230 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் மேலு
Iம் தொழிற்சாலை அமைய உள்ள இடத்திற்குள்ளே ஆரம்ப சுகாதார மையம் உள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார மையத்திற்கு கிராம மக்கள் பயனடைய 4 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் 150 கிராம் மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆலை அமைந்தால் அனைத்தும் பாதிக்கப்படும், தொழிற்சாலை வரும் பட்சத்தில் தொழிற்சாலைக்கான தண்ணீர் அதிகம் தேவை என்பதால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். இதனால் பல கிராமங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சிமென்ட் ஆலையினால் ஏற்படும் அதிகப்படியான மாசு காற்றில் கலந்து இந்த பகுதி மக்களுக்கு நுரையிரல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன்டை ஆக்சைடு சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு சுகாதார சீர்கேட்டை உருவாக்கும். பொதுமக்கள் வாழும் ஊருக்குள் சிமென்ட் ஆலை அமையவிருக்கும் உன்மையை மறைத்து ஆலை நிர்வாகம் மோசடி செய்துள்ளது. ஆகவே நீர் நிலம் காற்று மாசுப்பட்டு பொது மக்கள் பாதிக்தப்படும் அபாயத்தினை உணர்ந்து ஆலைக்கான உரிமத்தினை வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்றனர்.