கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி சுதா (35) என்பவர் கடந்த 23.08.2021 அன்று திருநெல்வேலியிருந்து கோவில்பட்டிக்கு அரசு பேருந்தில் பயணித்த போது கயத்தாறு பேருந்து நிலையத்தில் பேருந்து வந்தபோது தனது கைப்பயில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் திருடு போயுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.*
*இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அந்தோணி திலீப், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குமார், காவலர்கள் திரு. பாலகிருஷ்ணன், திரு. பாலமுருகன், திரு. சத்திரியன், பெண் காவலர்கள் திருமதி. முனீஸ்வரி, திருமதி. முத்துலதா மற்றும் செல்வி. முருகேஷ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்து திருடிய நகைகளை மீட்குமாறு உத்தரவிட்டார்.*
*அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் நேற்று கயத்தாறு புதிய பேருந்து நிலையத்தில் வாகன தனிக்கை மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர்களான அய்யப்பன் மனைவி 1) காளியம்மாள் (23) மற்றும் முத்துராஜா (எ) கீரி மனைவி 2) முத்துமாரி (எ) தமிழரசி (22) என்பதும் அவர்கள் கடந்த 23.08.2021 அன்று பேருந்தில் சுதாவின் பையிலிருந்து தங்க நகைகளை திருடியதும், மேலும் இவர்கள் தூத்துக்குடி வடபாகம், நாலாட்டின்புதூர் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் 10 பவுன் நகைகள் திருடியிருப்பதும், திருடிய நகைகளை அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் 3) அய்யப்பன் (35) என்பவரிடம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேற்படி தனிப்படையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.