தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே போலியான நாகமணி கல்லை விற்க முயன்றவர் உட்பட 13 நபர்கள் மீது வழக்குப்பதிவு, ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஓட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் சுப்பிரமணியன் (51) என்பவர் விலை மதிப்புமிக்க நாகமணி கல் ஒன்று இருப்பதாக கூறி அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் பழனிகுமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பழனிகுமார் சோரீஸ்புரம் ஊரைச் சேர்ந்த செல்வம், மாப்பிள்ளையூரணி ஊரைச் சேர்ந்த அரவிந்த் ஆகிய இருவரும் நாகமணி கல்லை விலைக்கு வாங்க தயாராக இருப்பதாக பழனிக்குமார் சுப்பிரமணியன் இடம் கூறியுள்ளார். இதையடுத்து சுப்பிரமணியன் கடந்த ஆகஸ்ட் 26 காலை 6:30 மணி அளவில் தன்னிடமிருந்த நாகமணி கல்லை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் அதே ஊரைச் முத்துராஜ் என்பவருடன் ஓசனுத்து to வடக்கு பரும்பூர் ரோட்டில் அருள்ராஜ் அறக்கட்டளைக்குச் சொந்தமானஇடத்தின் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தஅரவிந்த், செல்வம் ஆகியோரிடம் நாகமணி கல்லை எடுத்துக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு வந்த பழனிக்குமார், பவித்குமார் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கையில் கம்பு, அரிவாளுடன் பெரியதுரை, சரவணன், பிரகாஷ்,சிவக்குமார், ஆகாஷ், சிவா, இம்மானுவேல், வேல்முருகன் ஆகியோர் சுப்பிரமணியனிடம் நாகமணி கல்லை தங்களிடம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர் . அப்போது பழனிக்குமார், பவித் குமார், பெரியதுரை மூவரும் கையால் சுப்பிரமணியனை அடித்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் அனைவரும் கையில் கம்பு மற்றும் அரிவாள் வைத்துக்கொண்டு நாகமணி கல்லை கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் சுப்பிரமணியன் இடம் நாகமணி கல்லை பிடுங்கி சென்றுவிட்டனர். இதையடுத்து பயத்தில் இருந்த சுப்பிரமணியன் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் ஆகஸ்டு 27 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் நேற்று இரவு இச்சம்பவத்தில் தொடர்புடைய 12 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்ததில், ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்த பவித்குமார் (24) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து நாகமணி கல்லை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் அது போலி என தெரியவந்தது. இதையடுத்து புகார் அளித்தவர் ஆன சுப்பிரமணியன் உட்பட 12 நபர்களை உடனடியாக கைது செய்ய மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.