*காதல் ஜோடிகளிடம் போலீஸ் என கூறி பணம் பறித்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கைது*.
சென்னை வேளச்சேரி சென்னை சில்க்ஸ் பின்புறம் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடிகளிடம் போலீஸ் எனக்கூறி மிரட்டி விசாரணை என்ற பெயரில் காரை சோதனையிட்டு காதல் ஜோடியின் பர்சை எடுத்து அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு எச்சரித்து விட்டு சென்று விட்டார். இது குறித்து காதல் ஜோடி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீசர் விசாரணையில் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தது ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சசிகுமார் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் இவர் ஓய்வு பெற்றதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தற்போது பணியாற்றுவது போல அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளார. அப்போது
காதலர்கள் தனியாக காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்திற்குச் சென்று. அந்த பகுதியில் பணியாற்றும் போலீசார் போன்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு. இங்கு காதலர்கள் அமர்ந்து பேசக்கூடாது என்று பயமுறுத்தி இந்த விஷயத்தை பெற்றோர்களுக்கு தெரிவித்து விடுவேன் என மிரட்டியும் பெற்றோர்களுக்கு போன் செய்யுமாறும் வற்புறுத்தியும் பெற்றோர் வரும் வரை காவல் நிலையத்திற்கு வந்து இருங்கள் என அழைத்து மிரட்டி ஒருகட்டத்தில் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு செல்வது வழக்கமாக வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் தனியாக மது அருந்துபவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார்
சசிகுமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
செய்திகள் : தமிழன்ரமேஷ் , சென்னை