தங்கராஜ், என்ற நபர் நாமக்கல் நகர் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். தையல் தொழில் செய்து வரும் இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.
இவரது மனைவி செல்வராணி, இவர்கள் வசித்து வரும் அதே பகுதியில் பலகார கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், தங்கராஜ் தினமும் குடித்து விட்டு அவரது மனைவியை அடித்து துன்பப்படுத்தி வந்துள்ளார். வழக்கம் போல், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கராஜ் மதுபோதையில் அவரது மனைவியை தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி, பலகாரம் சுடுவதற்காக சூடுசெய்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெய்யை அவர் தலையின் மீது கொட்டியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த தங்கராஜை, அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, நாமக்கல் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவி செல்வராணியை கைது செய்தனர். குடும்ப தகராறில் கணவரின் மீது கொதிக்கு எண்ணெய்யை உற்றி மனைவி கொலை செய்தது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.