மதுரையில் வருமானவரித்துறை அலுவலகத்தின் எதிரே பச்சிளங் குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பத்தால் பரபரப்பு.!!
மதுரை பீ.பீ.குளம் வருமானவரித்துறை அலுவலகம் எதிரில் உள்ள இந்தியன் வங்கியில்
பணம் எடுப்பதற்காக மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற இளைஞர் வந்தபோது அந்த பகுதியில் நடந்துசென்றுள்ளார். இந்நிலையில்
அந்த பகுதியில் நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது.
இதனை பார்த்த அய்யனார் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் காவல்துறையினர் குழந்தையின் தலையை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் குழந்தையின் தலையில் சாக்கடை ஒட்டி இருந்த நிலையில. பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரையில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் பச்சிளங்குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.