ஆன்மீகம்செய்திகள்

விநாயகர் சிலையை இரவோடாக கரைத்த போலீஸ்

திருமங்கலத்தில் பொதுகோவிலினுள் வைத்த விநாயகர் சிலையை இரவில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அகற்றி , கண்மாயில் வீசியதால் இந்து முன்னணியினர் ஆத்திரம் – காவல் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் முன்பு வந்து தங்களுடைய செலவில் அதே சிலையை இந்து முன்னணியினருக்கு வாங்கிக்கொடுத்த வினோதம்.*

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள செங்குளம் பகுதியில், நேற்று இரவு நாலரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலை, அக்கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலினுள் வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் , இரவோடு இரவாக அருகில் உள்ள கண்மாய் நீரில் கரைத்தனர்.
அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி முன்னிலையில் , இந்து முன்னணியினர் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கண்மாய் நீரில் கரைத்த விநாயகர் சிலையை ஒப்படைக்க கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
தமிழக அரசு ,விதிமுறையை மீறி வைத்த விநாயகர் சிலையை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவல்துறை, வருவாய்துறையினரும் , பொது கோவிலில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றி , கண்மாய் நீரில் தூக்கி வீசப்பட்டதைக் கண்டித்து, இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வேறுவழியின்றி காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் புதிதாக சிலையை விலைக்கு வாங்கி , இந்து முன்னணியினரிடம் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து புதிய சிலையை பெற்ற இந்து முன்னணியினர் , செங்குளத்தில் பொது கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகின்றனர் .
அரசு அதிகாரிகளே விநாயகர் சிலையை விலைக்கு வாங்கி இந்து முன்னணியினரிடம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button